Direction : Greg Tiernan, Conrad Vernon

Production companies : Annapurna Pictures, Point Grey Pictures, Nitrogen Studios

             பொதுவாக எல்லாருக்குமே அனிமேசன் படங்கள் பிடிக்கும். பலர் தங்கள் பால்யங்களின் நினைவுகளை அதில் காண்கின்றனர். எனக்கும் பிடிக்கும். நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன் (என நம்புகிறேன்). அவற்றில் டிஸ்னி பாணி அல்லது Fairy tale கதைகள் அதிகம். பெரும்பாலும் கதைகளின் கட்டமைப்பு ஒரே மாதிரி இருக்கும். ருட்யார்ட் கிப்லிங் (Rudyard Kipling) ன் ஜங்கிள் புக் (Jungle Book) கதையை பலமுறை படம் எடுத்து கல்லா கட்டிய டிஸ்னி, அவருடைய மற்றொரு பிரபலமான “கிம் (KIM)” நாவலை படமாக எடுத்ததில்லை. இப்படியாக சில கதைகளை நான் டிஸ்னி பாணி என்று கூறுவதுண்டு. நிறைய அனிமேசன் பட நிறுவனங்கள் தற்போது இருந்தாலும் அவையும் இந்த டிஸ்னி பாணியை பயன்படுத்திதான் ஹிட் அடிக்கிறார்கள். இந்த படங்களில் நல்லதுக்கும் கெட்டதுக்கும் நடக்கும் சண்டை. அதில் நல்லவை ஜெயித்து நீதி நிலைநாட்டப்படுவதுதான் Template. இதில் குழந்தைகளை பாதிக்கும் அல்லது அவர்கள் தெரிந்துகொள்ள கூடாது என சில விசயங்கள் இல்லாமல் இருக்கும். அனிமேசன் அதிகம் குழந்தைகள் பார்க்கும் மீடியம் மற்றும் குழந்தைகள்தான் Target audience என்பதால் அவர்களின் கதைகள் இப்படித்தான் பெரும்பாலும் இருக்கின்றன. இப்போது சில விசயங்கள் மாறியிருக்கலாம்.

            இதையெல்லாம் சொல்ல காரணம் சாசேஜ் பார்ட்டி (Sausage party). வழக்கமான அனிமேசன் பட கட்டமைப்புகளோடு கூடிய அதே சமயம் கதை சொல்லலில் மாறுபட்ட அம்சங்களை கொண்ட படம். ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கதை தொடங்குகிறது. அங்குள்ள வீட்டு உணவுப் பொருட்கள் தங்களை தங்களை யாராவது ஒருவர் வாங்கி செல்ல வேண்டும் என ஆசைப்படுகின்றன. அப்படி யாருமே வாங்காமல் காலவரையறை முடியும் பொருட்களை அகற்றிடும் க்ளீனர்தான் அவைகளுக்கு வில்லனாக தெரிகிறான். ஒரு சாசேஜ் டப்பாவில் இருக்கும் நெட்டை சாசேஜ்ஜும், குட்டை சாசேஜ்ஜும் நண்பர்கள். நெட்டை சாசேஜ் ஒரு க்ரீம் பன்-ஐ காதலிக்கிறது. இந்த இரண்டு செட்டையும் ஒருத்தி வாங்குகிறாள். அவர்கள் போகும் Cart-ல் உள்ள தேன் டப்பா தற்கொலை செய்து கொள்ள முயலும்போது ஏற்படும் விபத்தில் நெட்டை சாசேஜ்ஜும் அதன் காதலி க்ரீம் பன்-ம் தன் கூட்டத்தினரை தவறவிட்டு விடுகிறார்கள். விபத்துக்கு நெட்டை சாசேஜ்தான் காரணம் என நினைக்கும் ஜூஸ் பாட்டில் அவர்களை பழிவாங்க நினைக்கிறது. மீண்டும் தன் கூட்டத்தோடு போய் சேர எண்ணும் நெட்டை சாசேஜ்க்கு Firewater பற்றி தெரியவருகிறது. தன் ஜோடியோடு firewater என்கிற செவ்விந்த்ய விஸ்கியிடம் வழி கேட்க செல்கிறது. இதுவரைக்கும் பெரும்பாலும் டிஸ்னி பாணி கதைதான். அதற்கு பிறகுதான் கூத்துக்கட்டி அடிக்கிறார்கள்.

t-exclusive-sausage-party

                 நண்பனை தவறவிட்ட குட்டை சாசேஜ் புதிய எஜமான் வீட்டை அடைகிறது. கூடவே உருளைக்கிழங்கு, தக்காளி, க்ரிஸ்பி மற்றும் இதர உணவுகள். அங்கே போனதும்தான் மனிதர்கள் தங்களை கொஞ்சி பத்திரப்படுத்த வாங்கவில்லை, தங்களை கொன்று சாப்பிடுவார்கள் என்று தெரிகிறது. உருளைக்கிழங்கு கொதிக்கும் நீரில் உயிரை விடுகிறது. தக்காளி கத்தியால் துண்டு துண்டாக வெட்டப்பட அதன் ரத்தம் எல்லா உணவுகளின் மீதும் தெரிக்கிறது. ஒவ்வொன்றும் மிக கொடூரமாக கொல்லப்படுகின்றன. இந்த கொடூரமான கொலைகளை பார்த்த ஒற்றை சாட்சியான குட்டை சாசேஜ் அங்கிருந்து தப்பிக்கிறது. இந்த உண்மையை சூப்பர் மார்க்கெட்டில் உள்ள மற்ற உணவுகளுக்கும் சொல்ல பயணம் மேற்கொள்கிறது. போதை ஊசிக்கு அடிமையான ஒருவனால் அது பேசுவதை கேட்கமுடிகிறது. சூப்பர் மார்க்கெட்டில் உடந்து உயிருக்கு போராடும் ஜூஸ் பாகஸ் மற்றவர்களை கொன்று ரத்தத்தை (அதாவது ஜூஸை) குடித்து உயிர் வளர்த்து நெட்டை சாசேஜ்ஜை தேடிக்கொண்டிருக்கிறது. குட்டை சாசேஜ் உண்மையை உலகுக்கு சொன்னதா? நெட்டை சாசேஜ் ஜூஸ் பாக்ஸை வென்றதா? சாசேஜ் நண்பர்கள்  மீண்டும் சந்தித்தார்களா? சந்தித்துவிடுவார்கள் என்பது உங்களுக்கே தெரியும் என்பதால் அது ட்விஸ்ட் இல்லை. நம்மை கொல்லும் மனிதர்களை நாம் கொல்லுவோம் என அவைகள் எடுக்கும் பழிவாங்கும் அவதாரம்தான் ட்விஸ்ட். தெறிக்க தெறிக்க மனிதனை கொல்லும் காட்சிகள். குட்டை சாசேஜ் போதைஊசிக்காரனின் தலையை கொண்டு வந்து போடும் காட்சி செம… அதற்காக தங்களை தற்கொலை படையாக மாற்றிக்கொள்ளும் உணவுகள் உச்சக்கட்டம். இன்னொரு உச்சக்கட்டமும் இருக்கிறது.சூப்பர் மார்க்கெட்டை விட்டு எல்லரையும் விரட்டியடித்த பிறகு உணவுகள் செய்யும் உடலுறவு காட்சிகள். இது டிஸ்னி பாணி படமல்லவே! பெரியவர்கள் பார்க்க வேண்டிய அனிமேசன் படம் என்று சொல்லலாம்.

                  சூப்பர் மார்க்கெட் உருவாக்கம் மிக அருமை. நெட்டை சாசேஜ் firewater-ஐ சந்திக்க போகும் பகுதி ஒரு அமெரிக்க நகரம் போலவே இருக்கும். அதற்குள் Firewater சரக்கு கூடாரம் போட்டு நெருப்பு மூட்டி அமர்ந்து கொண்டு புகை சமிக்ஞை கொடுப்பதெல்லாம் உச்சக்கட்ட காமெடி. இது போதாதென்று இந்திய அலமாரியிலிருந்து தவறி விட்ட சப்பாத்தியும், வடையும்(வடைன்னுதான் நெனக்கிறேன்) செய்யும் அலப்பறைகள் அட்டகாசம். இது உணவுகளின் உணர்வுகளை பேசும் படம்.

-Yugenprsanath

Advertisements